லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: இன்று முதல் புதிய விலைக்கு
[2024-05-03 09:12:26] Views:[11]
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என குறித்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,000 ரூபாவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










