மின்சார கட்டணம் மீண்டும் குறைக்கப்படுமா? கொண்டு வரப்படவுள்ள புதிய திருத்தம்:
[2024-05-02 09:17:41] Views:[10]
இந்த மாத இறுதிக்குள் மின்சாரக் கட்டணத்தில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9% ஆக குறைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 30 அலகுகளுக்கு கீழ் பயன்படுத்தும் பாவணையாளர்களுக்கு 33% கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணம் மீண்டும் கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










