கெஹேலியவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு:
[2024-05-01 10:47:29] Views:[10]
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு நேற்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை பரிசீலிக்க அனுப்பதிப்பதா? இல்லையா? என்ற உத்தரவை மே 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










