புலம்பெயர் தமிழரால் யாழில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சி!
[2024-04-30 09:32:47] Views:[11]
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவரை தலைவராக கொண்டு ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று (29) யாழ்ப்பாணத்தில்ஆரம்பித்து வைக்கப்படது.
அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் .
கல்வி, வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பலதரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு ஏற்ப செயற்படுத்த இருக்கின்றோம்.
தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் தேர்தல் காலத்திலேயே அது குறித்து இறுதி முடிவினை எடுப்போம். இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களுக்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம்.
தமிழ் இனம்சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.










