மின்னல் தாக்கியதில் அண்ணன், தங்கை பரிதாபமாக பலி!
[2024-04-30 09:02:50] Views:[13]
மாத்தளை, இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (29) மாலை இடம் பெற்றதாக இரத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும், 23 வயதுடைய அவரது சகோதரனான இளைஞனுமே இவ்வாறு மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










