யாழ்ப்பாணம் - தமிழ்நாடு கப்பல் சேவை மே மாதம் மீண்டும் ஆரம்பம்:
[2024-04-28 09:50:41] Views:[9]
தமிழ்நாடு - நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது.
மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8.00 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.00 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும்.
பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு நாகையை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34,200 ரூபா அறவிடப்படவுள்ளதாகவும், ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் நுழைவுச்சீட்டு விற்பனை முகவர் நிலையம் யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் அமையவுள்ளதுடன், இணையத்திலும் நுழைவுச்சீட்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.










