நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறிய செயலி அறிமுகம்!
[2024-04-27 11:16:44] Views:[9]
மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு செயல்பட்டு வருகிறது.
தற்போது, நீரில் மூழ்குவதால் ஏற்படும் மரணங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் அவ்வாரான இடங்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்து வருகிறது.
அதன்படி, 500க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட உள்ளன.
எச்சரிக்கை பலகைகளை நிறுவுவதற்கு சேவை வழங்குநர்கள், விநியோகஸ்தர்களை தேர்ந்தெடுக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த எச்சரிக்கை பலகைகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.










