தக்காளி விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி!
[2024-04-27 10:54:14] Views:[9]
நாட்டில் தக்காளியின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளி ஒரு கிலோ கிராம் 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இதன்காரணமாக தக்காளி செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.










