பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருளை கடத்தியவர் கைது!
[2024-04-26 10:22:58] Views:[12]
முச்சக்கரவண்டியில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 27,000 போதைப்பொருள்களை கடத்திச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (25) மேல்மாகாண புலனாய்வு தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருகொடவத்தை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 41 வயதுடைய 'பம்பின் குமார' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், யுக்திய உடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் தான் போதைப்பொருளை கொள்வனவு செய்ததாக விசாரணைகளின் போது தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










