யாழில் எரி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
[2024-04-26 09:38:48] Views:[9]
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் முழுமையாக எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (25) மாலை தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவராவர்.
குறித்த நபர் தனது மகளுடன் வசித்து வந்த இந்நிலையில் நேற்று மாலை வேளை அவரது மகள் வெளியே சென்றிருந்த போது முதியவர் பீடி புகைப்பதற்கு முயன்றவேளை படுகாகையில் தீப்பற்றி, தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










