இலங்கையில் Strawberry!
[2024-04-25 19:11:00] Views:[10]
இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி (Strawberry) சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில் நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதல் கட்டமாக நுவரெலியாவில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஸ்ட்ரோபரி செடிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒரு விவசாயிக்கு சுமார் 13 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் தெரியவருகிறது. 750,000 ரூபா விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுவதோடு மீதமுள்ள ஆறு இலட்சத்தை அந்தந்த விவசாயிகள் முதலீடு செய்ய வேண்டும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளதுடன்
ஸ்ட்ரோபரி திட்டத்திற்கு 40 பாதுகாப்பான பசுமைக்குடில்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வீடுகள் அனைத்தையும் தொலையியக்கி மூலம் முழுமையாக தானியங்கி முறையில் செயற்படுத்த முடியுமென விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது










