யாழ். சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி! அழகிகள் கைது! அங்கு சென்றவர்களின் விபரங்களும் கசிவு:
[2024-04-25 10:31:43] Views:[13]
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை திடீரென முற்றுகையிடப்பட்ட பொலிஸார் அங்கிருந்த அழகிகளை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ். சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே நேற்று (24) இரவு பொலிசாரால் இவ்வாரு முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 அழகிகளும், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.
தொலைபேசி இலக்கங்கள் ஊடாக விடுதியில் அழகிகளை ஒப்பந்தம் செய்து பலரும் அங்கு சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.










