தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
[2024-04-24 20:55:01] Views:[9]
கடந்த 22ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (24) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 700,552 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 700552 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24720 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதாகவும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 197,700 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181300 ரூபாவாக பதிவாகியுள்ளடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22660 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.










