yarlathirady.com

மேலும் அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு எச்சரிக்கை:

[2024-04-22 10:47:02] Views:[9]

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதிகளவான நீரை அருந்துதல், நிழலான இடங்களில் இயன்றவரை ஓய்வெடுத்தல், வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சிறுவர்களை முடியுமான வரை வெளியில் அனுப்பாதிருத்தல் மற்றும் முதியவர்களை அதிக அக்கறையுடன் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.