yarlathirady.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் நிறைவு! தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்:

[2024-04-21 10:15:19] Views:[9]

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் இன்று நள்ளிரவு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த ஊர்வலமானது, கொச்சிக்கடை தேவாவலயத்தில் இருந்து மட்டக்குளி பாலம், வத்தளைச் சந்தி ஹெகித்த வீதியூடாகவும், அங்கிருந்து நீர்கொழும்பு, கொழும்பு பிரதான வீதியூடாக கட்டுவாப்பிட்டி தேவாலயம் நோக்கி பயணிக்கவுள்ளது.

மேலும், கொழும்பு மறை மாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களிலும் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்றையதினம் நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தலின் போது ஏப்ரல் 21 அன்று தேவராதனையின் போது தமது தியாகங்களை இன் உயிராக்கியவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டது.

தேவாலய பிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.