யாழ். பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[2024-04-20 10:51:38] Views:[9]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதனால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.










