பலரது பாராட்டுக்களையும் பெற்ற 6 வயதான சிறுவன்
[2024-04-20 09:28:58] Views:[9]
நுவரெலியா பகுதியை சேர்ந்த 6 வயதான சிறுவர் ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் என தெரிய வருகிறது.
குறித்த சிறுவர் தமக்கு காண்பிக்கப்பட்ட சகல உடல் உறுப்புக்களின் பெயர்களையும் சரியாக கூறியதுடன் அதிக உடல் உறுப்புக்களின் பெயர்களைக் கூறி, இந்த சாதனையை படைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர்மற்றும் பொதுச் செயலாளர் அந்த சிறுவரின் சாதனையை உறுதி செய்து அவருக்கான சான்றிதழை வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.










