அரிசி ஏற்றிச் சென்ற லொறி - சாரதி உட்பட மூவர் காயம்!
[2024-04-19 19:24:01] Views:[9]
இன்று (19) அம்பாறையிலிருந்து வெலிமடைக்கு அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பதுளை நுவரெலியா பிரதான வீதியில் வெல்லவாய பகுதிக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாகியதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
லொறியின் சாரதி இரும்பு கம்பிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்துள்ள நிலையில் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.










