மாரடைப்பால் உயிரிழந்த 15 வயதான மாணவன்! யாழில் பெரும் அதிர்ச்சி:
[2024-04-19 16:13:09] Views:[9]
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவர் நேற்று முன்தினம் (16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம், அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வாழ்விடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










