யாழில் கொடுர சம்பவம்: மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தலைமறைவு!
[2024-04-18 07:04:40] Views:[12]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.










