நெல்லியடி கரவெட்டி புனித அந்நோனியார் ஆலயத்தில் மருதமடு அன்னையின் திருச் சொருபம்....!!
[2024-04-17 21:26:24] Views:[12]
மருதமடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று பிற்பகல் 5:00 மணிக்கு வருகைதந்துள்ளதுடன் அங்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது.
நாளை காலை 7.00 மணிவரை சிறப்பு வழிபாடுகள் இடம் பெறவுள்ளதுடன் காலை 7.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் காலை 8:00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். நெல்லியடி போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிட தகுந்த விடயமாகும்.










