யாழ்.நகரிலிருந்து வலி.வடக்கிற்கு புதிய பேருந்து சேவை..!
[2024-04-17 10:58:21] Views:[11]
யாழ்ப்பாணம் வயாவிளான் திக்கம்புரை சந்தியில் இருந்து யாழ்.நகருக்கான புதிய பேருந்து சேவை நேற்று (16) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வயாவிளான் திக்கம்புரை சந்தியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த சேவை, சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பழை வைத்தியசாலையை அடைந்து காங்கேசன்துரை வீதி வழியாக யாழ்.நகரை சென்றடையும்.
நேற்று காலை 7.00 மணியளவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் குறித்த பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய அதிகாரிகள், மதகுருமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.










