முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும காலமானார்!
[2024-04-17 06:07:16] Views:[10]
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் நேற்று (16) பிற்பகல் மின்சாரம் தாக்கி காலமானார்.
அவர் களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலித தெவரப்பெரும தனது தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் உபாதைக்குள்ளாகி நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.










