புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா சென்றவர்களின் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ...!
[2024-04-14 09:09:45] Views:[11]
ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காலி பகுதியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டிருந்த குழுவொன்று பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.










