யாழ்பாணத்தில் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் சிக்கிய பெண் கைது...!!
[2024-04-13 09:42:48] Views:[10]
நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்தை உடமையில் வைத்திருந்த காரணத்தால் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் கூறப்படுகின்றது.










