யாழ் கடல் பகுதியில் வலையில் சிக்கிய டொல்பின்கள்! மீனவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.
[2024-04-07 11:01:26] Views:[10]
யாழ்ப்பாண வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர்களின் கரைவலையில் சிக்குண்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் உயிருடன் விடப்பட்டுள்ளன.
குறித்த டொல்பின்கள் நேற்றுமுன்தினம்(05) மீனவர்களின் கரைவலையில் சிக்கியுள்ளன. கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை 11 டொல்பின்கள் அகப்பட்டன. இதேவேளை, டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அவனித்த மீனவர்கள் 11 டொல்பின்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர். டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்தவன்னம் உள்ளனர்.










