யாழ். பேராலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள மருதமடு மாதாவின் திருச்சொரூபம்.
[2024-04-07 10:31:15] Views:[10]
மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100வது ஆண்டு விழாவிற்கு மருதமடு அன்னையின் திருசொரூபமானது மன்னார் மாவட்டப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்நிலையில், யாழ் ஆயரின் வேண்டுகோளுக்கு அமைவாக திருச்சொரூபமானது மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு நேற்றைய தினம்(6) சனிக்கிழமை எடுத்து வரப்பட்ட திருச்சொரூபம் யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவுவின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் கொண்டு செல்லப்படவுள்ளது.










