கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள்-வெளியான அதிர்சி தகவல்கள்..!
[2024-04-06 20:22:17] Views:[9]
நேற்றுமுன்தினம்(04) அதிகாலை இலங்கையிலிருந்து படகில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5kg எடை கொண்ட சுமார் 3 கோடி ரூபாய் இந்திய மதிப்பு கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதனை இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற மூவரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும்,அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும்,இந்திய கடலோர கடற்படை இந்திய கடற்படை மற்றும் சுங்கத்துறை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்என குறிப்பிடப்படுகின்றது.










