யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து - மூவர் படுகாயம்
[2024-04-06 10:42:16] Views:[10]
நேற்று(5) வட்டுக்கோட்டை - துணவி பகுதியில் மதியம் மோட்டார் சைக்கிள் ஒன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
வட்டுக்கோட்டையில் இருந்து நவாலி பகுதியை நோக்கிப் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிலே விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிலில் பயணித்த18 மற்றும் 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










