yarlathirady.com

புதிதாக தொலைபேசி வாங்குபவர்களுக்கு இனிய செய்தி.

[2024-04-05 22:25:40] Views:[11]

நாட்டில் டொலரின் பெறுமதியானது வீழ்ச்சி அடைந்த காரணத்தால் கையடக்க தொலைபேசிகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி,கையடக்க தொலைபேசிகளின் விலை 18%-20% வரை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனஅந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தற்போது டொலர் 300/= ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 pro max 515 000/= முதல் 530 000/= ரூபா வரை காணப்பட்ட விலை தற்போது 375 000/= ரூபா வரை குறைவடைந்துள்ளது. அதேபோல், குறைந்த விலையுடைய கைப்பேசிகளின் விலையும் 18 முதல் 20 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது. 10,000/= ரூபா வரை அதிகரித்திருந்த கைப்பேசியை தற்போது 7000/= ரூபாக்கு பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.