yarlathirady.com

எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவை

[2024-04-05 12:00:46] Views:[9]

இன்று (05) முதல் நாட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று (05) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன்படி இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.


இந்த சேவைகளுக்காக 1,000 அரச பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளதுடன், எதிர்வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.


புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், புத்தாண்டு காலத்தில் விசேட தொடருந்து சேவைகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இந்த விசேட தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை, பெலியத்த, கண்டி, ஹட்டன் மற்றும் பதுளைக்கு விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.