உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக வெளியான கல்வி அமைச்சின் அறிவித்தல்.
[2024-04-04 20:53:03] Views:[10]
2023ஆம் ஆண்டுக்கான நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு கின்றது.
கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை இவ்வருடம் மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. மேற்படி குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










