வெளிநாட்டுக்கு வேலை பார்க்க செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்.
[2024-04-04 11:13:39] Views:[10]
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 500 இளைஞர்கள் வீதம் அதிபர் நிதியத்தின் அனுசரணையுடன் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த கருத்தை அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், மனிதவளம் மற்றும் பாதுகாப்புத் துறை அதன் ஒருங்கிணைப்பைச் செய்து வருகிறது. அத்தோடு இதற்கான செலவை அதிபர் நிதியம் ஏற்றுக்கொள்வதுடன் இந்தப் பயிற்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளை இலக்காகக் கொண்டது.
இலங்கை ஹோட்டல் பயிற்சிக் கல்லூரியின் பாடநெறிகளுக்கு இளைஞர்கள் வழிநடத்தப்படுவதுடன் ஹோட்டல்துறையில் வேலைவாய்ப்பைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இளைஞர்கள் நேரடியாக வேலைகளுக்கு வழிவகுக்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகளுக்கு அனுப்பப்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.










