yarlathirady.com

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தமிழ் கல்வெட்டு.

[2024-04-03 21:46:24] Views:[9]

வன்னியில் தொல்லியற் திணைக்கள ஆய்வின் போது பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலபகுதியைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டொன்று கண்டுபிடிகப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு பிரதேச மக்களால் அங்குள்ள வயல்வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டு அங்குள்ள வைரவர் ஆலயத்தில் தெய்வச்சிலைகளை வைப்பதற்கான பீடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அக்கல்லில் உள்ள எழுத்துக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த வவுனியா பிரதேசசபை ஆய்வு உத்தியோகத்தர் திரு. ஜெயதீபன் இது பற்றிய செய்தியை திரு. மணிமாறனுக்கு தெரியப்படுத்தியதன் பேரில் இக்கல்வெட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினரினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

பல வரிகளில் எழுதப்பட்டிருந்த இக்கல்வெட்டின் உடைந்த கீழ்ப்பகுதி மாத்திரமே கிடைத்துள்ளது. அதில் ஐந்து வரிகள் காணப்படுகின்றன. அதன் முதலாவது வரியில் உள்ள எழுத்துக்கள் பல பெருமளவு சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே அவ்வரியில் சொல்லப்பட்ட பெயர்களை அல்லது செய்திகளை அறியமுடியவில்லை. ஏனைய நான்கு வரிகளையும் தெளிவாக வாசிக்க முடிகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.