யாழில் போதை மாத்திரை விற்பனை - 6 பேர் கைது
[2024-04-03 19:13:47] Views:[10]
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த குருநகரை சேர்ந்த ஐவரும் நாவாந்துறையை சேர்ந்த ஒருவருமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம் செய்யும் போது நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










