சதொசவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு!
[2024-04-02 22:04:41] Views:[11]
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்றையதினம்(02) முதல் பொதுமக்களுக்கு நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 4 500/= ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியானது 3 420/= ரூபா என்ற சில்லறை விலையில் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபா என்ற சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தகவலை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.










