யாழில் உயிரிழந்த மூதாட்டியிற்கு திரைப்பட பாணியில் நிகழ்ந்த அநீதி!
[2024-04-02 21:32:49] Views:[13]
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் பெரு விரலில் மை இடப்பட்டு இருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் இருந்து,வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு," தாயிடம் இருந்து சிலர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்த போது பெண்ணின் கை பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.










