பயங்கர விபத்து
[2024-04-02 15:45:28] Views:[13]
நேற்றையதினம் (01) லொறி ஒன்று ரயிலுடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ரயில் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அருகில் இருந்த மரக்கறி விற்பனை நிலையம் பலத்த சேதமடைந்ததுடன் அதன் உரிமையாளர் அதனை பூட்டி விட்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










