எரிபொருளை தொடர்ந்து லிட்ரோ எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டது.
[2024-04-01 12:23:57] Views:[9]
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(01) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் பின்வருமாறு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 135/= ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 4115/= ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 55/= ரூபா குறைக்கப்பட்டுள்ளது எனவே அதன் புதிய விலை 1,652/= ரூபாவாகும். மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23/= ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை 772/= ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.










