yarlathirady.com

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

[2024-04-01 11:00:26] Views:[10]

நேற்று (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது. அதனடிபடையில், 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 07 ரூபாவினால் குறைந்து புதிய விலை 440 ரூபாய் ஆகும். அத்துடன், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.அதேவேளை, மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும். எனினும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கவனத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன். அதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதுஅதன் அடிப்படையில்,வரி குறைப்பு,மின் கட்டணம்,குடிநீர் கட்டணம் ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.