யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய பத்து மாடிகட்டடம் விரைவில்.
[2024-03-31 11:48:37] Views:[22]
யாழ் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றினை நிர்மானிப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வைத்தியசாலையில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் போதனா வைத்தியசாலையில் தினமும் அதிகளவிலான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில் விடுதிகளிலும் அதிகளவிலானோர் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக 10 மாடியுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும், ஆகவே, புதிய கட்டடத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










