யாழ் போதனா வைத்தியசாலையில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய அம்சம்.
[2024-03-30 21:47:28] Views:[10]
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை 06.00 மணி வரை செயற்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா நாட்கள் தவிர்ந்த ஏனைய கிழமை நாட்களில் மாலை 06.00 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.
வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆற்கள் பற்றாக்குறை ஒரு பாரிய சவாலாக காணப்படுகின்றது. எனினும் எம்மிடம் காணப்படுகின்ற வளங்களை முறையாக பயன்படுத்தி சேவையாற்றி வருகின்றோம் என வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.










