yarlathirady.com

நீர்க்குழாய் மூலம் கசிப்பு விற்பனை! கைதான குடும்பஸ்தர்.

[2024-03-30 21:00:33] Views:[9]

முள்ளியவளை பிரதேசத்தில் வீட்டு காணி ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து குழாய் மூலமாக விநியோகித்த சந்தேக நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் முள்ளியவளை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தி செய்து நீர் குழாய் மூலம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற பொலிஸார் குழாய் அமைப்பு ஒன்றையும் மற்றும் அதற்கு கீழே நிலத்தில் புதைக்கப்பட்ட கசிப்பும் கண்டறியப்பட்டுள்ளதுடன், இரு பெரல் கோடா இதன்போது மீட்கப்பட்டுள்ளது. பொருட்களையும் சந்தேக நபரையும் இன்று சனிக்கிழமை மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.