yarlathirady.com

பூமியின் சுழற்சி நேரத்தில் மாற்றம் - விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

[2024-03-29 22:09:40] Views:[15]

பூமியானது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளது. பூமி தன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டு சூரியனையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது என்பதே அறிவியல் உண்மை. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கின்றதுடன், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றது.

பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பூமிசுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 29 அன்று, பூமி அதன் குறுகிய நாள் சாதனையை முறியடித்தது. 1960 க்கு பின் மிகவும் குறுகிய காலத்தில் முடிந்த மாதமாக அது கருதப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 29, பூமி மிகவும் குறுகிய நாளை பதிவு செய்தது.

இதன் மூலம் பூமி வேகமாக சுழல்வது மீண்டும் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று பூமி மிகவும் வேகமாக சுழன்று, 24 மணி நேரத்திற்குள் ஒரு நாளை நிறைவு செய்தது.

அதாவது 1.47 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே பூமி தனது சுழற்சியை நிறைவு செய்தது. இந்த நிலையில் நேற்று பூமி 1.59 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பூமி இதைவிட வேகமாக சுழன்று இந்த சாதனையை முறியடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.