சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சையின் பின்னர் கொண்டு வரப்படவுள்ள புதிய அம்சம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு.
[2024-03-29 21:47:59] Views:[10]
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார். சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும் வரையான நான்கு மாத காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு புதிய வேலைத்திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்பதாக க.பொ.த. உயர் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளில் உயர் கல்விக்காக தோற்றும் இரண்டு மாணவ குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர். இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. அதற்கான இட முகாமைத்துவமும் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஆங்கில பாடம் கற்பித்து அண்மைக்காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களை, மேலும் 03 வருட காலங்களுக்கு தற்காலிகமாக ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.










