முதுமாணி கற்கைநெறியை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் சாதனை!
[2024-03-29 21:37:38] Views:[9]
லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை இலங்கை பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ஸதீபா முஸ்னா முகம்மட் முனாஸ் என்ற பெண்ணே நாட்டிற்கு பெருமையை தேடித்தந்துள்ளார். 29 வயதான இவர், கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி, மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயம், திருகோணமலை புனித மரியாள் போன்ற கல்லூரிகளில் கல்வி கற்று, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். இதன் பின்பு லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை தொடர்ந்த இவர் அங்கு சிறப்பாக கற்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு Advanced Product Design Engineering and Manufacturing முதுமாணிக் கற்கையில் இவர் சிறப்பு சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.










