யாழில் கோரவிபத்து;முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.
[2024-03-29 21:23:05] Views:[14]
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவனை வதிவிடமாக கொண்ட 65 வயதுடைய முதியவர் ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தின் மீது லொறி மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது வீதியிலிருந்த மின்கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










