விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
[2024-03-26 14:53:10] Views:[15]
நேற்றையதினம் (25) இரவு 10.30 மணியளவில்மாத்தளை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் பெண் ஒருவரும் இளைஞன் ஒருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 31 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










