வடமராட்சி கிழக்கில் விற்பனைக் கண்காட்சி!
[2024-03-26 11:52:59] Views:[11]
நேற்றையதினம் (25) காலை 9:00 மணியளவில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் விற்பனை கண்காட்சி ஆரம்பமாகி மாலை 05.00 மணிவரை இடம்பெற்றது.
பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தினர்.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.










