27வயது இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
[2024-03-24 12:55:23] Views:[10]
திருகோணமலையில் இன்று (24) அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த 27வயது இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தெரிவித்துள்ளதாகவும் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










